குற்றம்

ஆன்லைனில் சிறுமி முதல் மூதாட்டி வரை என பலருக்கும் பாலியல் தொந்தரவு: இருவர் கைது

ஆன்லைனில் சிறுமி முதல் மூதாட்டி வரை என பலருக்கும் பாலியல் தொந்தரவு: இருவர் கைது

kaleelrahman

ஆன்லைன் வகுப்பில் உள்ள சிறுமிகளை குறிவைத்து ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோ அனுப்பி பாலியல் சீண்டல்களில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.

ஆன்லைன் மூலம் படிக்கும் சிறுமிகள் மற்றும் சமூக வலைதளங்களில் மூழ்கியுள்ள பெண்களை குறிவைத்து, அவர்களிடம் நண்பர்கள்போல் முதலில் குறுஞ்செய்திகள் பகிர்ந்து பின்னர் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இவர்கள் அனுப்பியுள்ளனர். பின்னர், அதேபோல் அவர்களையும் அனுப்பச் சொல்லி, சிறுமிகள் மற்றும் பெண்களை மிரட்டி பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இது குறித்து அறிந்த மதுரையைச் சேர்ந்த சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மற்றும் மகாராஜா ஆகிய இருவரை மதுரை எஸ்.எஸ் காலனி காவல் துறையினர் கைது செய்து அவர்கள் பயன்படுத்திய செல்போனை பறிமுதல் செய்தனர். இதையடுத்து செல்போனை ஆய்வு செய்தனர். அதில், ஆறு வயது சிறுமி முதல் 60 வயது மூதாட்டி வரை உள்ள பெண்களிடம் இருவரும் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதை காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்

இந்நிலையில், ஆன்லைன் வகுப்புகளில் படிக்கும் குழந்தைகளை அவர்களது பெற்றோர்கள் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் எனவும், இது போன்ற மோசடி நபர்களிடம் பெண்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும் காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.