குற்றம்

சென்னை: ரயிலில் ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட நகை, பணம் பறிமுதல்

சென்னை: ரயிலில் ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட நகை, பணம் பறிமுதல்

JustinDurai

உரிய ஆவணங்கள் இன்றி 616 சவரன் நகை மற்றும் 8 லட்சம் ரூபாய் பணம் எடுத்து வந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில், ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனையிட்டனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் இருந்த இருவரின் உடமைகளை சோதனைக்கு உட்படுத்தினர். உரிய ஆவணங்கள் இன்றி பணம் மற்றும் நகைகள் எடுத்து வரப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக, கோவையை சேர்ந்த ஈஸ்வரன், ராமநாதன் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட நகைகள், பணம் ஆகியவை ஜி.எஸ்.டி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.