ஓசூரில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலியை வழிப்பறி செய்த பெங்களுரை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நேருநகர் பகுதியில் கடந்த மாதம் 12ஆம் தேதி நீலா என்ற பெண் நடந்து சென்றுள்ளார். அப்போது அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை இரண்டு பேர் பறித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் ஓசூர் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதோடு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.
இந்த நிலையில் இந்த வழிப்பறி வழக்கில் தனிப்படை போலீஸார் கர்நாடகா மாநிலம் பெங்களுரு நங்கநாதபுரா பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஒட்டுநர் கார்த்திக் (38) மற்றும் பெங்களுரு ராமசாமிபாளையா வேசநகர் பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி (34) ஆகிய இருவரை கைது செய்து அவர்களை ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.