குற்றம்

திருமணத்தை மீறிய உறவுக்கு தடை: 3 வயது குழந்தையை கழுத்து நெரித்துக் கொன்றதாக தாய் கைது

JustinDurai
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே 3 வயது குழந்தையை கழுத்து நெரித்துக் கொன்றதாக தாய் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
கல்லாங்குத்து மலைவாழ் குடியிருப்பில் வசித்து வரும் மணிகண்டன் - சரோஜினி தம்பதிக்கு 3 வயதில் பெண் குழந்தை இருந்தது. கடந்த 14ஆம் தேதி குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி, சரோஜினி அரசு மருத்துவமனைக்கு குழந்தையை எடுத்துச் சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். எனினும் குழந்தையின் இறப்பில் சந்தேகம் ஏற்பட்டதால், ஆனைமலை காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், சரோஜினிக்கும், பொம்மன் என்பவருக்கும் இடையே தொடர்பு இருப்பது தெரியவந்தது. திருமணத்தை மீறிய உறவுக்கு, குழந்தை தடையாக இருந்ததால், அதனை கொலை செய்துவிட்டு நாடகமாடியது அம்பலமானது. இதையடுத்து, சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கை, கொலை வழக்காக பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.