போலீஸ் மீது தாக்கு
போலீஸ் மீது தாக்கு pt desk
குற்றம்

தேர்வில் காப்பியடித்த தங்கை – கண்டித்த போலீஸ் ஏட்டை தாக்கிய அண்ணன்.. வினோத 'பாசமலர்'..!

webteam

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

கர்நாடகாவில் அனைத்து மாவட்டங்களிலும் இரண்டாம் ஆண்டு பி.யு.சி. கடைசி தேர்வு நடந்து முடிந்தது. இந்நிலையில், கலபுரகி, அப்சல்புரா தேர்வு மையத்தில், தேர்வு முறைகேட்டை தடுக்கும் நோக்கில், போலீசார் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிருந்தனர். இதையடுத்து ஏட்டு பண்டித் பான்ட்ரே என்பவர் தேர்வு மைய கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தார்.

போலீஸ் மீது தாக்கு

அப்போது ஒரு மாணவி, காப்பி அடித்து, தேர்வு எழுதுவதை கவனித்த ஏட்டு, மாணவியை கண்டித்ததோடு இந்த விஷயத்தை தேர்வு அறை கண்காணிப்பாளரிடமும் தெரிவித்துள்ளார். இதையடுத்து தேர்வு முடிந்த பின் வெளியே வந்த மாணவி, தன் அண்ணன் கைலாஷிடம் நடந்ததை கூறியுள்ளார். இதனால், கோபமடைந்த இவர், தன் நண்பர் சமீருடன் சேர்ந்து, ஏட்டு பண்டித் பான்ட்ரேவை திட்டியதுடன், கல்லால் தாக்கியுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அப்சல்புரா போலீசார், கைலாையும் அவரது நணபர் சமீரையும் கைது செய்தனர்.

தாக்குதலில் காயமடைந்த ஏட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.