செய்தியாளர்: பே.சுடலைமணி செல்வன்
திருச்செந்தூர் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் அரிச்சந்திரன் (43). ஆட்டோ டிரைவரான இவர், கடந்த 24ந் தேதி உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அலறிய நிலையில், சிறுமியை மிரட்டிவிட்டு, தப்பியோடி உள்ளார்.
இது குறித்து அந்த சிறுமி பெற்றோரிடம், கூறியதை அடுத்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுமியுடன் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், ஆட்டோ ஓட்டுநரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.