திருச்சி நவல்பட்டு சிறப்பு எஸ்.ஐ வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 2 சிறுவர்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த 10 வயது, 17 வயது சிறுவர்கள் மற்றும் 19 வயது இளைஞர் உட்பட நான்கு பேரை இந்த கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை ரகசிய இடத்தில் வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பள்ளத்துப்பட்டியில் நவல்பட்டு காவல் நிலையத்தில் பணியாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் ஆடு திருடியவர்களை விரட்டி சென்றபோது நேற்று அதிகாலை கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 19 வயது இளைஞர் ஒருவரையும் 17 வயது சிறுவன் மற்றும் 10 வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதில் இருவர் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர்கள். ஒருவர் புதுக்கோட்டை மாவட்டம் அண்ணா பகுதியை சேர்ந்தவர் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.