கர்நாடகா தக்காளி திருட்டு வழக்கில் கைதான திருப்பத்தூர் தம்பதி
கர்நாடகா தக்காளி திருட்டு வழக்கில் கைதான திருப்பத்தூர் தம்பதி Twitter
குற்றம்

கர்நாடகா தக்காளி திருட்டு வழக்கு: திருப்பத்தூர் தம்பதி கைது! மேலும் மூவரை தேடும் பணியில் காவல்துறை!

PT WEB

ஜூலை 8, பெங்களுரில் உள்ள சித்திர துர்கா மாவட்டம் , ஹரியூர் நகரில் இருந்து கோலார் சந்தைக்கு விவசாயி ஒருவர் தக்காளியை தனது வண்டியில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். அப்போது திடீரென அவரை வழிமறித்த மர்ம கும்பல், விவசாயியை தாக்கியுள்ளது. மேலும் தங்கள் வண்டியின் மீது விவசாயி மோதியதாக கூறி இழப்பீடு கேட்டுள்ளது அக்கும்பல்.

தக்காளி

பின்பு அவரை வண்டியில் இருந்து வலுக்கட்டாயமாக கீழே தள்ளி இழப்பீடாக கேட்ட பணத்தையும் தங்கள் மொபைலுக்கு மாற்றியுள்ளனர். மேலும்  விவசாயி கொண்டு சென்ற 2,000 கிலோ கிராம் தக்காளியை வண்டியுடன் திருடுடியும் சென்றுள்ளனர்.

இது குறித்து விவசாயி புகார்கொடுக்கவே, புகாரின் அடிப்படையில் சம்பவம் நடந்த இடமான ஆர்.எம்.சி யார்டு காவல்நிலைய எல்லைக்கு சென்ற காவல்துறையினர், அங்கு வைக்கப்பட்டிருந்த CCTV  காட்சியில் தகவல்களை சேகரித்தனர். அதில், தமிழ்நாட்டின் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த பாஸ்கர், சிந்துஜா தம்பதியினர் இந்த திருட்டில் ஈடுபட்டது அம்பலமானது. ஜூலை 8 அன்று நடைப்பெற்ற இச்சம்பவம், ஜூலை 22 அன்று உறுதி செய்யப்பட்டதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

tomato

விசாரணை மூலம் பாஸ்கர்- சிந்துஜா தம்பதி, பீன்யா மற்றும் பெங்களூரு அருகே தங்களின் வாகனத்தை நிறுத்திவிட்டு, பதிவு எண் பலகை இல்லாத வேறொரு வண்டியில் தக்காளிகளை வாகனத்துடன் திருடியது தெரியவந்தது. மேலும் தக்காளியானது சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 3 குற்றவாளிகளான மகேஷ், குமார், ராக்கி போன்றவர்களையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

வாணியம்பாடி காவல் நிலையத்தில் பாஸ்கர் மீது ஏற்கெனவே 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

Indian Penal Code (IPC).

தற்போது குற்றவாளிகள் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 346A, 392 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 - ஜெனிட்டா ரோஸ்லின்