செய்தியாளர்: எழில்
திருவள்ளூர் அடுத்த தொடுகாடு நமச்சிவாயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (27). இவர், தொழில் செய்வதற்காக தனது தாய் ஜெயந்தியிடம் தினமும் மது போதையில் வந்து பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பெற்ற மகன் மீது தாய் ஜெயந்தி பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ண மூர்த்திக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனையடுத்து மகனை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த ஜெயந்தியை மப்பேடு காவல் துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.