செய்தியாளர்: ஹாலித் ராஜா
திருப்பூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மன்னரை பகுதியில் வடக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி நின்றிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனார். ஆப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் இருவரும் வங்காளதேச நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் முறையான ஆவணங்கள் இன்றி இந்தியாவிற்கு வந்து கடந்த 9 ஆண்டுகளாக திருப்பூரில் தங்கி பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் உரிய ஆவணங்கள் இன்றி திருப்பூரில் தங்கியிருந்த அப்துல் உசேன் (45) மற்றும் இப்ராஹிம் (33) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.