குற்றம்

திருப்பூர்: நகைக்கு பாலீஷ் போடுவதாக மோசடியில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது

திருப்பூர்: நகைக்கு பாலீஷ் போடுவதாக மோசடியில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது

kaleelrahman

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நகைக்கு பாலீஷ் போட்டு தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

வலசுபாளையத்தை சேர்ந்த தன்பால் என்பவரை அணுகிய இரண்டு பேர் பழைய நகைகளை புதிதுபோல் மாற்றுவதாகக் கூறி அவரது நகையை வாங்கி சுத்தப்படுத்தியுள்ளனர். பின்னர் அதை ஒரு குக்கரில் போட்டு சற்று சூடு படுத்தினால் சுத்தமாகிவிடும் என்றும் கூறியுள்ளனர். ஆனால், தனபால் உள்ளே சென்று குக்கரை பார்த்தபோது அதில் நகை இல்லை.

இதையடுத்து இரு சக்கர வாகனத்தில் தப்பியோட முயன்ற இருவரையும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பிடித்த தனபால் அவர்களை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், இதேபோல் பல சம்பவங்களை அரங்கேற்றியிருப்பதும், காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.