திருமூர்த்தி நகரில் 72 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் ரமேஷ். தேங்காய் மண்டியில் கூலி வேலை செய்து வரும் இவர், கடந்த இரு தினங்களுக்கு முன்பு குடிபோதையில் இருந்துள்ளார். அப்போது அதே பகுதியில் வசித்து வரும் புவனலக்ஷ்மி (72) என்ற மூதாட்டியின வீட்டிற்குச் சென்று, தனியாக இருந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்நிலையில் மூதாட்டி, உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இது குறித்து அரசு மருத்துவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து புகாரின் பேரில் உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று மூதாட்டியிடம் விசாரணை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து ரமேஷை கைது செய்த உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.