குற்றம்

நாதுராமிற்கு அடைக்கலம் கொடுத்த 3 பேர் கைது

நாதுராமிற்கு அடைக்கலம் கொடுத்த 3 பேர் கைது

webteam

ராஜஸ்தானில், கொள்ளையன் நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த 3 பேரை அம்மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை கொளத்தூர் ராஜமங்கலம் பகுதியில் உள்ள நகைக்கடையில் கொள்ளையடித்த நாதுராம் மற்றும் அவரது கூட்டாளி தினேஷ் சவுத்ரியைத் தேடி சென்னை தனிப்படை காவல்துறையினர் ராஜஸ்தான் சென்றுள்ளனர். ஆனால், காவல்துறையினரிடம் சிக்காமல் இருக்க தன்னுடைய இருப்பிடங்களை, நாதுராம் மாற்றி வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் ராஜஸ்தான் காவல்துறையினர் நாதுராமின் நண்பர்கள், உறவினர்களை கண்காணித்து வந்தனர். அதில், நாகோர் மாவட்டம் பெசரோலி கிராமத்தில் அவர் தங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து காவல்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். 

ஆனால், காவல்துறையினர் செல்வதற்குள் நாதுராம் அங்கிருந்து தப்பிவிட்டார். இதையடுத்து, நாதுராம் பதுங்குவதற்கு இடம் கொடுத்த அவரது கூட்டாளிகள் 3 பேரை ராஜஸ்தான் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.