மதுரை மத்திய சிறையில் கைதிகள் ரகளையில் ஈடுபட்டது தொடர்பாக, கரிமேடு காவல்நிலையத்தில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிறையின் கட்டடங்கள் மீது ஏறி கைதிகள் புதன்கிழமை ரகளையில் ஈடுபட்டனர். அத்துமீறி தகராறில் ஈடுபட்ட கைதிகளை காவல்துறையினர் கட்டுப்படுத்தினர். இது தொடர்பாக சிறையின், உதவி சிறை அலுவலர் நாகேஸ்வரன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, சிறையில் இருக்கும் மருது சேனை தலைவர் ஆதிநாராயணன் மீது தாக்குதல், கஞ்சா பதுக்கி வைத்திருந்தது, கட்டங்கள் மீது ஏறி கற்கள், பாட்டில்களை கொண்டு ரகளையில் ஈடுபட்டது தொடர்பாக கரிமேடு காவல் நிலையத்தில் 3வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே, மதுரை மத்திய சிறையில் எஸ்.பி.யாக இருந்த தமிழ்ச்செல்வன், கடலூர் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, திருச்சி சிறையில் ஏ.டி.எஸ்.பியாக இருந்த வசந்த் கண்ணன் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.