குற்றம்

போலி ஆவணங்கள் மூலம் ரூ. 12 லட்சம் வரை மோசடி... அதிரடி காட்டிய குற்றப்பிரிவு போலீசார்!

webteam

விழுப்புரம் அருகே தனியார் நிதி நிறுவனத்தில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிப்பர் லாரி வாங்குவதற்காக போலி ஆவணம் மூலம் ரூ.12 லட்சம் கடன் பெற்று மோசடி செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் டிப்பர் லாரி வாங்குவதற்காக போலி ஆவணங்கள் தயாரித்து அதன் மூலம் ரூபாய் 12 லட்சம் கடன் பெற்று மோசடி செய்ததாக கிளை மேலாளர் ஜெய கண்ணன் என்பவர் அளித்த புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரில் பேரில் விசாரணை மேற்கொண்ட குற்றப்பிரிவு போலீசார், மயிலத்தைச் சேர்ந்த ஏழுமலை, குமார், ஈஸ்வரன், கோபி கண்ணன், ஆகிய நான்கு பேர் மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஏழுமலை (41) குமார் (34) ஈஸ்வரன் (47) ஆகிய மூன்று பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, கோபி கண்ணனை தேடி வருகின்றனர்.