Hotel pt desk
குற்றம்

தெலங்கானா டூ திருவாரூர் | இரண்டு கார்களில் கடத்திவரப்பட்ட 400 கிலோ கஞ்சா பறிமுதல் - 5 பேர் கைது

தெலங்கானா மாநிலத்தில் இருந்து திருவாரூருக்கு கடத்திவரப்பட்ட 400 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 5 பேரை கைது செய்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: மாதவன்

தெலங்கானா மாநிலத்தில் இருந்து 2 கார்களில் 400 கிலோ கஞ்சா கடத்தி வந்தவர்களை narcotics bureau காவல்துறையினர் பின்தொடர்ந்து வந்துள்ளனர். இதையடுத்து கஞ்சா கடத்தி வந்தவர்கள் திருவாரூர் நாகை சாலையில் ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்துள்ளனர்.

Arrested

அப்போது அவர்களை narcotics bureau  காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். இதையடுத்து அவர்களிடமிருந்து இரண்டு இரண்டு கிலோ எடை கொண்ட 200 பொட்டலங்கள் என மொத்தம் 400 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதைத் தொடர்ந்து அங்கு இருந்த 5 பேரை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்ற்னர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.