குற்றம்

திருமயத்தில் இளம்பெண் சாவில் மர்மம்: கணவர் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு

திருமயத்தில் இளம்பெண் சாவில் மர்மம்: கணவர் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு

kaleelrahman

திருமயம் அருகே திருமணமாகி மூன்று ஆண்டு ஆன நிலையில் இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் பெண்ணின் கணவர் உள்ளிட்ட 6 பேர் மீது 4 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கோனாபட்டில் திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆன உமா மகேஸ்வரி (23) என்ற இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இறந்த இப்பெண்ணின் உடலை அவரது கணவன் வீட்டார் காவல் துறையினருக்கு தெரியாமலும், பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு உடலை காட்டாமல் அவசர அவசரமாக எரித்து விட்டனர்.


இறந்த பெண்ணின் கணவர் சிவகுமாரின் தகாத உறவை கண்டித்ததால் தங்களது பெண்ணை அடித்து கொலை செய்து விட்டதாக கூறி பெண்ணின் பெற்றோர் காவல் துறையிடம் புகார் கொடுத்ததை தொடர்ந்து, உயிரிழந்த பெண்ணின் கணவர் சிவக்குமார், மாமனார் முருகப்பன், மாமியார் செல்வி மற்றும் உறவினர்கள் குமார் கணேசன் ராமு உள்ளிட்ட 6 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டம் (143) சட்டவிரோதமான கூட்டத்தில் சேர்ந்து இருத்தல், (176) தகவலை மறைத்தல், (201) சாட்சியங்களை கலைத்து தடயங்களை அழித்தல், (51 டீ) பேரிடர் காலத்தில் அரசு தடைவிதித்து இருந்தும் தடையை மீறி கூடுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் திருமயம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.