திருட சென்ற இடத்தில் கடிதம் எழுதிய நபர் pt web
குற்றம்

”வீட்டில் ஒரு ரூபாய் கூட இல்லை, அடுத்த தடவை திருட வந்தால்.,” - நான்கு பக்க கடிதம் எழுதிய திருடன்!

”வீட்டில் ஒரு ரூபாய் கூட இல்லை,அடுத்த தடவை என்ன மாதிரி திருட வந்தால் யாரும் ஏமாற வேண்டாம் காசு வைக்கவும்” என கோரிக்கை வைத்து வீட்டின் உரிமையாளருக்கு திருட சென்ற நபர் நான்கு பக்க கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளார்.

PT WEB

நெல்லையில், திருட சென்ற வீட்டில் ”ஒரு ரூபாய் கூட காசு இல்லை; காசு வைக்கவும்” என திருட வந்த நபர் கடிதம் எழுதி வைத்துவிட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நெல்லை பழைய பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜேம்ஸ் பால் என்பவர் தன்னுடைய மகளை பார்ப்பதற்காக மதுரைக்கு குடும்பத்தோடு சென்றுள்ளார். அப்போது, வீட்டை உடைத்து வீட்டின் உள்ளே சென்ற மர்ம நபர் வீட்டிலிருந்த பீரோவினை உடைத்து நகை பணம் உள்ளதா என்று தேடிப் பார்த்துள்ளார்கள். தொடர்ந்து, வீட்டில் இருந்த ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உண்டியலை திருடிக்கொண்ட அவர், கடைசியாக வீட்டு உரிமையாளருக்கு அந்த நபர், ஒரு நான்கு பக்கங்களை கொண்ட கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார்.

திருட வந்த நபர் எழுதிய கடிதம்

அந்த கடிதத்தில், "வீட்டில் ஒரு ரூபாய் கூட இல்லை, அடுத்த தடவை என்ன மாதிரி திருட வந்தால் யாரும் ஏமாற வேண்டாம் காசு வைக்கவும்; எதற்கு இத்தனை கேமரா போங்கடா வெண்ணைகளா என்னை மன்னித்து விடுங்கள் இப்படிக்கு திருடன்" என எழுதி வைத்துவிட்டுச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் ஹார்ட் டிஸ்கையும் திருட வந்த நபர் எடுத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்