குற்றம்

காதல் ஜோடிக்கு நேர்ந்த கொடூரம்: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை!

காதல் ஜோடிக்கு நேர்ந்த கொடூரம்: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை!

webteam

தேனியில் காதல் ஜோடியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தை சேர்ந்த காதலர்கள் எழில் முதல்வன் மற்றும் கஸ்தூரி. இந்த காதல் ஜோடி, சுருளி மலை பகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு பிணமாக மீட்கப்பட்டனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த இராயப்பன்பட்டி காவல்துறையினர், திவாகரன் (எ) கட்டவெள்ளை அந்த காதல் ஜோடியை பாலியல் கொடுமை செய்து கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைந்தனர். இந்த வழக்கு விசாரணை இன்று மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி செந்தில் குமரேசன் முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் நிருபீக்கப்பட்டதால் திவாகரனுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். அத்துடன் ஆயுள் தண்டையும், 7 வருடன் சிறை தண்டனையும் திவாகரனுக்கு விதிக்கப்பட்டுள்ளது. அந்த நீதிமன்றத்தில் வழங்கப்படும் முதல் தூக்கு தண்டனை இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பாக உருக்கத்துடன் பேசிய எழில் முதல்வனின் தந்தை, “என் மகனை அந்த குற்றவாளி கொடூரமாக கொலை செய்துவிட்டார். அந்த குற்றாவளிக்கு தற்போது மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது எனக்கு ஆறுதலாக உள்ளது. இந்த வழக்கை விசாரித்த போலீஸாருக்கும், தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கும் நன்றி” என்று கண்ணீருடன் தெரிவித்தார்.