இளைஞர் கைது pt desk
குற்றம்

தேனி | சீமானுக்கு கொலை மிரட்டல் - இளைஞர் கைது

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை தேனி சைபர் க்ரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

PT WEB

செய்தியாளர்: ரமேஷ் கண்ணன்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்கள் பரப்பி கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் மீது தேனி சைபர் க்ரைம் பிரிவில் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக ஆண்டிபட்டி இளைஞர் சந்தோஷை அழைத்து வந்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இயங்கும் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சந்தோஷ் தான் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்தது நிரூபணமானது. இதைத் தொடர்ந்து சந்தோஷை கைது செய்த போலீஸார் அவரை தேனி தேக்கம்பட்டி சிறையில் அடைத்தனர்.