14 வயது சிறுமியை காதலிப்பதாகக்கூறி கர்ப்பமாக்கிய 14 வயது சிறுவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
தேனி மாவட்டம் போடி பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் சிறுமி வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் பள்ளி மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார்.
இதையடுத்து இருவருக்கும் இடையே மிக நெருக்கம் ஏற்ப்பட்டு சிறுவன் சிறுமியை கர்ப்பமாக்கியதாக தெரிகிறது. இதையறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் துறையினரிடம் கொடுத்த புகாரின் பேரில் போடி குரங்கணி காவல் துறையினர் சிறுவனை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சிறுவன் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, அனைத்து மகளிர் காவல்துறையினர் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மதுரை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு கொண்டு சென்றனர். பின்னர், பாதிக்கப்பட்ட சிறுமி குழந்தைகள் நல காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.