குற்றம்

பெற்ற தாயை பெட்ரோல் ஊற்றி எரித்த மகன்

பெற்ற தாயை பெட்ரோல் ஊற்றி எரித்த மகன்

webteam

சொத்து தகராறில் தாயை அடித்து உதைத்து பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே தந்தையை கொலை செய்த வழக்கும் இவர் மீது நிலுவையில் உள்ள நிலையில், இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த ஈசான் ஓடை பகுதியை சேர்ந்தவர் ராணி. இவருக்கும், இவரது மகன் ஆறுமுகத்திற்கும் கடந்த சில மாதங்களாக சொத்து தகராறு‌ இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ராணி காணாமல் போனார். இது தொடர்பாக ராணியின் மகள் அளித்த புகாரின் பேரில் காட்பாடி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, சொத்து தகராறில் தாயை அடித்து உதைத்து பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றதாக ஆறுமுகம் தெரிவித்துள்ளார். கொலை செய்த தாயை விவசாய நிலத்திலேயே புதைத்துவிட்டதாகவும் இவர் கூறியுள்ளார்.

ராணி புதைக்கப்பட்ட இடத்தை ஆறுமுகம் அடையாளம் காட்டியதையடுத்து உடல் தோண்டியெடுக்கப்பட்டு காட்பாடி வட்டாட்சியர் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. சில மாதங்களுக்கு முன் தந்தையை கொலை செய்ததாக ஆறுமுகத்தின் மீது வழக்கு நிலுவையில் உள்ளது.