குற்றம்

ஆபாசமாக சித்தரித்த புகைப்படம்.. ஆன்லைன் கடன் கும்பலின் அட்டுழியத்தால் இளைஞர் தற்கொலை

ஆபாசமாக சித்தரித்த புகைப்படம்.. ஆன்லைன் கடன் கும்பலின் அட்டுழியத்தால் இளைஞர் தற்கொலை

JustinDurai

ஆன்லைன் கடன் செயலி மூலம் பணம் பெற்று திருப்பி செலுத்த முடியாத இளைஞரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டதால் மனமுடைந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்ற இளைஞர் ஆன்லைன் கடன் செயலி மூலம் பணம் பெற்று திரும்ப செலுத்த முடியாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் பாண்டியனின் ஆதார் அட்டையில் உள்ள அவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அவரது உறவினர்கள் நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியதால் மனமுடைந்து வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட பாண்டியன் ஆன்லைன் ரம்மியும் விளையாடி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்கலாம்: ’பாலியல் புகாரை வாபஸ் வாங்க ஒரு கோடி ரூபாய் பேரம்’ - விஜய் பாபு மீது நடிகை குற்றச்சாட்டு