மதுரையில் திரைப்பட பாணியில் கொட்டும் மழையில் இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் ஆத்திக்குளம் மகாலெட்சுமி நகரைச் சேர்ந்த முத்துக்கண்ணன் சாலையில் சென்றுகொண்டிருந்த போது 3 பேர் கொண்ட கும்பல் அவரை தாக்கியது. இதில் காயமடைந்த அவர் தப்பியோடிய போது அக்கும்பலைச் சேர்ந்தவர்கள் விரட்டிச் சென்று முத்துக்கண்ணனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் முத்துக்கண்ணன் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முன்விரோதம் காரணமாக இக்கொலை நிகழ்ந்திருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.