குற்றம்

திண்டிவனம்: வீட்டில் தனியாக இருந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை

திண்டிவனம்: வீட்டில் தனியாக இருந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை

kaleelrahman

திண்டிவனம் அருகே உள்ள விழுக்கம் கிராமத்தில், வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மர்ம நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த விழுக்கம் கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மனைவி கன்னியம்மாள் (49). இவர் சுமார் 5 ஆண்டுகளுக்கு மேலாக குடிசை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். நேற்று இரவு தனியாக இருந்த பெண்ணை மர்ம நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். கன்னியம்மாள் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு இருப்பதை கண்ட வீட்டின் அருகில் இருந்தவர்கள் வெள்ளிமேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். இக்கொலை சம்பவம் குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து விரைந்து வந்தவர், அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டார். முதற்கட்ட விசாரணையில் மதுபோதையில் அந்த பெண்ணை வன்கொடுமை செய்து கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.


மேலும் கொலை செய்த மர்ம நபரை, போலீசார் தேடிவருகின்றனர்.