குற்றம்

பாலியல் புகார்: கோவை அரசு கல்லூரி பேராசிரியருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

பாலியல் புகார்: கோவை அரசு கல்லூரி பேராசிரியருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

JustinDurai
பாலியல் புகாருக்கு ஆளான அரசு கல்லூரி பேராசிரியருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
கோவையில் உள்ள அரசுக் கல்லூரி ஒன்றில் ஒரு குறிப்பிட்ட துறையின் தலைவராக பணியாற்றும் துணைப் பேராசிரியர் ஒருவர், மாணவிகளுடன் இரட்டை அர்த்தத்துடன் உரையாடுதல் மற்றும் பாலியல் உணர்வைத் தூண்டும் விதமாக பேசிய வாட்ஸ்ப்அப் சேட்டிங் ஆகியவை வெளியாகி உள்ளன. சில மாணவிகளின் பொருளாதார நிலையை தெரிந்துகொண்டு, அவர்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதாக மாணவி ஒருவர் கல்லூரி முதல்வரிடம் கடந்த சனிக்கிழமை எழுத்துப்பூர்வமாக புகார் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக துறை ரீதியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த மாணவியிடம் உறுதியளிக்கப்பட்டதாகவும், ஆனால் அதன்படி எதுவும் நடைபெறவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அரசு கலைக் கல்லூரி நிர்வாகம் சார்பில் பாலியல் புகாருக்கு ஆளான பேராசிரியருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மதியம் 1 மணிக்குள் கொடுக்கும் விளக்கத்தில் அடிப்படையில் துறை ரீதியான அல்லது சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என முதல்வர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். மேலும் பேராசிரியர் மீதான புகார் தொடர்பாக மாணவிகளிடம் காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.