குற்றம்

மயிலாப்பூர் தம்பதி கொலை வழக்கு: இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

JustinDurai

மயிலாப்பூர் தம்பதி கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த ஐடி கம்பெனி அதிபர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி அனுராதா ஆகியோர் கடந்த மே மாதம் 7 ஆம் தேதி அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பியபோது அவரது கார் ஓட்டுநரால் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 மணி நேரத்தில் கொலை செய்த கார் ஓட்டுநர் கிருஷ்ணா மற்றும் அவரது நண்பர் ரவிராய் ஆகியோரை ஆந்திராவில் வைத்து கைது செய்து அவரிடம் இருந்து 8 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வைர நகைகளை பறிமுதல் செய்தனர்.

பின்னர் கொலை செய்த தம்பதியை செங்கல்பட்டு மாவட்டம் நெமிலிச்சேரியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் குழி தோண்டி புதைத்தது தெரியவந்ததையடுத்து போலீசார் உடலை மீட்டனர். குறிப்பாக தம்பதிகளிடம் அதிகளவிலான பணம், நகைகள் இருப்பதால் அதை கொள்ளையடிக்க மூன்று மாதங்களாக திட்டமிட்டு தம்பதியை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட கார் ஓட்டுநர் கிருஷ்ணா வாக்குமூலம் அளித்தனர். கார் ஓட்டுநர் கிருஷ்ணா, ரவிராய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிக்க: 20 வருடங்கள் உடனிருந்து நம்ப வைத்து கழுத்தறுத்த கதை - மையிலாப்பூர் தம்பதி கொலையின் பின்னணி

இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிருஷ்ணா, ரவிராய் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த இரட்டை கொலை வழக்கில் குற்றப்பத்திரிகையை விரைந்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கையில் மயிலாப்பூர் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: கொலையாளியை உயிருடன் எரித்துக் கொன்ற கிராமத்தார் - பஞ்சாயத்தில் அதிரடி தீர்ப்பு