ஆபாச படங்களை பேஸ்புக்கில் பகிர்ந்தது தொடர்பாக இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
தஞ்சையை அடுத்துள்ள திருக்கானூர்பட்டி அந்தோணியார் கோவில் தெருவைச் சேர்ந்த சகாயராஜ் என்பவரின் மகன் அருண் பிரகாஷ் (24). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர், பேஸ்புக்கில் சிறுமிகள் குறித்த ஆபாச படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில், ஆன்லைன் மூலமாக சைபர் க்ரைம் போலீசாருக்கு புகார் வந்துள்ளது. இதனையடுத்து புகாரின் பேரில் வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அருண் பிரகாஷ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.