மகன் கைது pt desk
குற்றம்

தென்காசி | மதுபோதையில் தந்தையை வெட்டிக் கொலை செய்த மகன்

சங்கரன்கோவில் அருகே குடிபோதையில் தந்தையை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: டேவிட்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மலையான்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லையா. இவர், அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு மூன்று ஆண்கள் ஒரு பெண் பிள்ளைகள் இருந்த நிலையில், மூன்றாவது மகன் கணேசன், அடிக்கடி குடிபோதையில் ரகலையில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே சொத்தை பிரித்துக் கொடுப்பதில் தகராறு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்ற கணேசன் வழக்கம்போல் போதையில் வந்து ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று மாலை விவசாய வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு வந்த செல்லையாவிடம் கணேசன் ரகளையில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த கணேசன், அரிவாளால் தந்தையை வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், செல்லையா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். செல்லையாவை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய மகன் கணேசனை குருவிகுளம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.