செய்தியாளர்: முத்துப்பாண்டியன்
தென்காசி அருகே ஏழாம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமி ஒருவர் டியூசனுக்கு சென்றுள்ளார். அப்போது மயிலப்புரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த டெய்லர் முருகன் (68) என்ற முதியவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.