Fake Tv
Fake Tv  pt desk
குற்றம்

தெலங்கானா: ஆண்ட்ராய்டு டிவிகளை ஸ்டிக்கர் ஒட்டி நியூ பிராண்டட் டிவிகள் என விற்பனை! சிக்கிய கும்பல்!

webteam

தெலுங்கானா மாநிலம் விகாரபத் மாவட்டத்தில் உள்ள பூலமுடி அருகே வழக்கம் போல் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார், ஒரு வேன், ஏழு ஸ்கூட்டர் ஆகியவற்றில் சிலர் ஆண்ட்ராய்டு டிவிகளை கொண்டு செல்வதை பார்த்த போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

Accused

உடனே அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், அவர்கள் கொண்டு சென்ற டிவிகளை ஆய்வு செய்தனர். அப்போது பிரபல தொலைக்காட்சி பெட்டி தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் பெயரில் ஏராளமான ஸ்டிக்கர்கள் அவர்களிடம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார், விசாரணை நடத்தினர்.

விசாரணையில், டெல்லியில் குறைந்த விலைக்கு சாதாரண ஆண்ட்ராய்டு டிவிகளை வாங்கி தொழில் நுட்பம் மூலம் 10 நிமிடத்தில் ஒவ்வொரு டிவியையும் அவர்கள் பிரபல நிறுவனம் ஒன்று தயாரித்த டிவிகள் போல் தோன்றும் வகையில் சாப்ட்வேரில் மாற்றம் செய்வதை போலீசார் அறிந்து கொண்டனர்.

Vehicle

இதைத் தொடர்ந்து டில்லியை சேர்ந்த பவன் சர்மா, சலீம் ஆகியோர் தங்கள் நண்பர்களை கூட்டாளிகளாக சேர்த்துக் கொண்டு பிரபல நிறுவனங்களின் பெயர்களில் போலி டிவிகளை தயார் செய்து தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் விற்பனை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், பவன் சர்மா, சலீம் ஆகியோர் உட்பட ஒன்பது பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 71 ஆண்ட்ராய்டு டிவிகள், ஒரு கார், ஒரு வேன், ஏழு ஸ்கூட்டர்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து தப்பியோடி தலைமறைவாக இருக்கும் இருவரை தேடி வருகின்றனர்.