தெலங்கானாவில் 5 வயது சிறுவனை பிரம்பால் அடித்ததற்காக ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள தாரங்கா பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் காஜா லதீஃப் என்ற 5 வயது சிறுவன் யு.கே.ஜி படித்து வருகிறான். வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற அவன் சக மாணவர்களோடு சண்டை போட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து சிறுவன் காஜாவை ஆசிரியை குமுதினி என்பவர், முதுகில் பிரம்பால் அடித்துள்ளார்.
ஆசிரியை அடித்ததில் சிறுவனின் முதுகு தடித்து சிவந்துள்ளது. இதனை கண்ட சிறுவனின் பெற்றோர் ஆசிரியை மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் ஆசிரியை குமுதினி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.