குற்றம்

தஞ்சை: லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்ட ஊராட்சி ஒன்றிய துணை ஆணையர்

kaleelrahman

தஞ்சையில் லஞ்சம் வாங்கியதாக ஊராட்சி ஒன்றிய துணை ஆணையர் சாமிநாதன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரவிந்தன் என்பவருக்கு சொந்தமான மனைகளை வரைமுறைப்படுத்த சாமிநாதன் 9 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகத் தெரிகிறது. இது தொடர்பாக அரவிந்தன் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் தெரிவித்தார். பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் அளித்த அறிவுரையின்படி ராசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஊராட்சி ஒன்றிய துணை ஆணையரிடம் வழங்கினார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் துறையினர் ஊராட்சி ஒன்றிய துணை ஆணையர் சாமிநாதனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.