குற்றம்

தஞ்சை: மகளின் தோழிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அதிமுக பிரமுகர் போக்சோவில் கைது

தஞ்சை: மகளின் தோழிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அதிமுக பிரமுகர் போக்சோவில் கைது

kaleelrahman

தஞ்சை அருகே மகளின் தோழிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அதிமுக பிரமுகர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தஞ்சையை அடுத்துள்ள மாரியம்மன் கோயில் வெள்ளாளசெட்டித் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் (38). தனியார் பேட்டரி கம்பெனியில் மேலாளராக பணியாற்றும் இவர், தஞ்சை தெற்கு அதிமுக இளைஞர்கள், இளம்பெண்கள் பாசறை தலைவராக உள்ளார். இந்நிலையில் பத்தாம் வகுப்பு படிக்கும் இவரது மகளுடன் அதே பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது தோழியும் படித்து வந்துள்ளார்.

இதனிடையே வேல்முருகன், தனது மகளின் தோழிக்கு அவரது மகள் மெசேஜ் அனுப்புவதைபோல தொடர்ந்து வாட்ஸ்ஆப்பில் மெசேஜ் அனுப்பி வந்துள்ளார். இதையடுத்து சில மாதங்களுக்கு முன் அந்த மாணவியின் வீட்டிற்குச் சென்ற வேல்முருகன் அவருடன் சேர்ந்து செல்ஃபி எடுக்க முற்பட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த வாரம் வேல்முருகன், மாணவியின் வீட்டிற்கு அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்துச் சென்றுள்ளார். அருகில் வசித்து வந்ததோடு தொடர்ந்து அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த அந்த மாணவி இதுகுறித்து வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கலைவாணி மற்றும் போலீசார் வேல்முருகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.