குற்றம்

திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூர்யா திடீர் கைது - காரணம் என்ன?

திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூர்யா திடீர் கைது - காரணம் என்ன?

நிவேதா ஜெகராஜா

திமுக மாநிலங்களைவை எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா இன்று திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி உளுந்தூர்பேட்டை அருகே தனியார் பேருந்து மோதியதில் தனது காருக்கு சேதம் ஏற்பட்டதாக கூறி பணம் கேட்டு மிரட்டியதாக சூர்யா மீது திருச்சி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்திருக்கிறது. மேலும், விபத்துக்கு காரணமான தனியார் பேருந்தை எடுத்துச் சென்றதாகவும் அதன் உரிமையாளர் புகார் அளித்திருந்திருக்கிறார்.

இந்தப் புகார்களின் அடிப்படையில், சூர்யாவை திருச்சி கண்டோன்மென்ட் காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர்.

இவர், கடந்த மாதம் 8-ம் தேதிதான் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்திருந்தார். பாஜக-வில் இணைந்தபோது சூர்யா சிவா, தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆளும் கட்சியாக வரும் என்ற நம்பிக்கையில் அதில் இணைந்ததாகவும், திமுகவில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதாலேயே அதிலிருந்து விலகி தற்போது பாஜகவில் இணைந்ததாகவும் கூறியிருந்தார்.