குற்றம்

‘ஐயோ என் மகளையாவது விடுங்க’ - அம்மா, மகளுக்கு நேர்ந்த கொடூரம்!

‘ஐயோ என் மகளையாவது விடுங்க’ - அம்மா, மகளுக்கு நேர்ந்த கொடூரம்!

webteam

தாய் மற்றும் மகளை இரக்கமின்றி பாலியல் வன்கொடுமை செய்த கொடூரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் சிறுமி ஒருவர் உடல் முழுவதும் காயங்களுடன் கடந்த 15ஆம் தேதி கிடந்தார். அதைக் கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றிய, போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்தச் சிறுமியின் உடலில் 86 காயங்கள் இருப்பது மருத்துவ ஆய்வறிக்கையில் தெரியவந்தது. ஏற்கனவே காஷ்மீர் ஆசிஃபா வழக்கு உள்ளிட்ட பல பாலியல் வன்கொடுமை வழக்குகள் சமீபத்தில் தேசிய அளவிலான பிரச்னையை ஏற்படுத்தியுள்ளதால், இந்த வழக்கில் காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். 

விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. அந்தச் சிறுமியின் தாயார் கணவரை இழந்தவர். தனது குழந்தையுடன் வாழ வருமானம் இல்லமால், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் எல்லைப்பகுதியான கங்காபூரில் வசித்து வந்துள்ளார். அந்த நேரத்தில் ஒருவர் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய ஆட்கள் வேண்டும் எனக்கூறி, அந்தப் பெண்ணிடம் ரூ.35,000 வழங்கி, குழந்தையுடன் அவரை சூரத் அழைத்துச்சென்றுள்ளார். அங்கு சென்றதும், அந்த நபரின் மற்றொரு கொடூர முகம் தெரியவந்துள்ளது. ஒரு வீட்டிற்குள் அடைத்து வைத்து அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான் அந்தக் கொடூரன். 

அந்தப் பெண் கொடூரனுடன் சண்டைப் போட குழந்தையைக் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியுள்ளான். பின்னர் தனது உறவினர் ஒருவனுடன் சேர்ந்து அந்தச் சிறுமியையும் கொடூரன் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளான். உடனே சிறுமியின் தாய் அவர்களை தடுக்க, அவரை அடித்து கீழே தள்ளியுள்ளனர். ‘ஒப்பந்த அடிப்படையில் பணி என்று அழைத்து வந்து அநியாயம் செய்யாதே. ஐயோ என் மகளையாவது விடுங்க. நாங்கள் உங்கள் பணத்தை கொடுத்துவிட்டு திரும்பி சென்றுவிடுகிறோம்’ என்று கதறியுள்ளார் அந்தப் பெண். அந்தக் கொடூரன்கள் இரக்கமின்றி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 4 நாட்களாக சிறுமியை அடைத்து வைத்து அதே கொடூரத்தை செய்துவிட்டு, பின்னர் 11 வயது குழந்தை என்றும் பாராமல் 86 முறை கட்டையால் அடித்துக்கொன்றுள்ளனர். அந்த உடல் தான் கிரிக்கெட் மைதானத்தில் 15ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது. 

அந்தச் சிறுமியின் தாயும் காணவில்லை. சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட 3 நாட்களுக்கு முன்னர், அதே பகுதியில் ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அது சிறுமியின் தாய் தானா? என்பதை அறிய, டிஎன்ஏ சோதனைக்கு அந்த உடலை அனுப்பி வைத்துள்ளனர் காவல்துறையினர். இந்நிலையில் முக்கிய குற்றவாளியான, இருவரையும் பணிக்கு அழைத்து வந்த கொடூரன் கைது செய்யப்பட்டுள்ளார்.