புழல் சிறையில் உள்ள சிவசங்கர் பாபாவை மேலும் ஒரு போக்சோ வழக்கில் கைது செய்து சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் தனியார் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா, மாணவிகளைப் பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றச்சாட்டில் கடந்த ஜூன் 16ஆம் நாள் டெல்லி அருகே சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
விமானத்தில் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட சிவசங்கர் பாபா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் சிறையில் உள்ள சிவசங்கர் பாபாவை மேலும் ஒரு போக்சோ வழக்கில் கைது செய்து சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். போக்சோ சட்டத்தில் கைதான சிவசங்கர் பாபாவை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.