குற்றம்

சிங்கப்பூரில் 3 இந்தியர்களை அடைத்துவைத்த மேனேஜர் - 4.87 லட்சம் அபராதம் விதித்த அரசு

Sinekadhara

சிங்கப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேனேஜராக வேலை செய்பவர் ஷாவுன் பாங் டோங் ஹெங் (41 வயது). இவருக்குக் கீழ் வேலை செய்த 3 இந்தியர்களை விதிமுறைகளை மீறி 40 நாட்கள் அடைத்து வைத்ததற்காக அந்த அரசு 9000 டாலர் அபராதம் விதித்துள்ளது.

கணேஷ் பாண்டி, பாண்டியன் ஜெயகாந்தன் மற்றும் முத்துராஜ் தங்கராஜ் ஆகிய 3 இந்தியர்கள் கொடுத்த வழக்கை விசாரித்தபோது, அவர்களை அடைத்துவைத்து கட்டுப்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்டார் ஷாவுன்.

மாவட்ட நீதிமன்றத்தில் அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், அந்த மூவருமே மேனேஜருக்கு பிரச்னை உருவாக்குபவர்களாக இருந்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். மேலும் பாண்டி மற்றும் ஜெயகாந்தன் இருவரும், கொரோனா நோயாளியின் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஒரு கடைக்கு மதுபானம் வாங்கச் சென்றிருக்கின்றனர். இதுதவிர ஜெயகாந்தன் லைசன்ஸ் இல்லாமல் கம்பெனி லாரி ஓட்டியதாகவும், தங்கராஜ் என்பவர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதில் பிடிபட்டதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் அவர்களை வைத்திருந்த அறையில் சுத்தமான படுக்கை, குளியலறை, போதுமான குடிநீர் மற்றும் வை-ஃபை வசதிகள் அமைத்துக் கொடுத்திருந்ததாகவும் அவர் கூறியிருக்கிறார்.

ஆனால் இதுகுறித்து போலீஸ் புகார் அளிக்காமல் சட்டத்தை தன் கையில் எடுத்தக் குற்றத்திற்காக நீதிமன்றம அவருக்கு தண்டனை விதித்துள்ளது. அதன்படி, மேனேஜருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் அல்லது 9000 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் அபரதமாக விதிக்கப்படலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.