தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஏரல் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருப்பவர் பாலு. இவர் கொற்கையில் ரோந்து பணியில் இருந்தபோது போதையில் சுற்றிய முருகவேல் என்பவரை கண்டித்ததாக தெரிகிறது.இதனால் ஆத்திரமடைந்த முருகவேல் சரக்கு வாகனத்தை எடுத்து வந்து எஸ்.ஐ பாலுவை கொன்று விட்டு தப்பியுள்ளார். காவல் உதவி ஆய்வாளரை கொலை செய்த முருகவேலை பிடிக்க 10 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.