Driver drags police officer with tempo; pt web
குற்றம்

குமரி | காவலரை தரதரவென டெம்போவோடு இழுத்துசென்ற டிரைவர்! வெளியான தாக்குதல் வீடியோ

கன்னியாகுமரியில் காவலரை டிரைவர் தரதரவென டெம்போவோடு இழுத்து சென்று தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகியுள்ளது.

சண்முகப் பிரியா . செ

செய்தியாளர் - எஸ்.சுமன்

கன்னியாகுமரியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலரை டெம்போ டிரைவர் ஒருவர் டெம்போவுடன் தர தரவென இழுத்து சென்று தாக்கிய டெம்போ காட்சிகள் தான் காண்போரை அதிர வைக்கிறது. என்ன நடந்தது ? விரிவாகப் பார்க்கலாம்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பேருந்து நிலைய பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை நள்ளிரவு தக்கலை போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் அசோக் தலைமையிலான போக்குவரத்து காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக நாகர்கோவில் பகுதியை சேர்ந்த அருள்சுந்தர் என்பவர் ஓட்டி வந்த ஈச்சர் டெம்போவை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டுள்ளனர்.

டிரைவர் அருள்சுந்தர் குடி போதையில் டெம்போவை ஓட்டி வந்தது தெரியவந்ததால் காவலர் பெல்ஜின் ஜோஸ் ஆல்ஹகால் பிரீத்திங் அனலைஸர் மூலம் அவரை சோதனை செய்ய முயன்றுள்ளார். அப்போது அருள்சுந்தர் திடீரென டெம்போவை இயக்கியதால் காவலர் பெல்வின் ஜோஸ் டெம்போ கதவை பிடித்து தொங்கிய நிலையில் அவரை டெம்போவுடன் தர தரவென சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் இழுத்து சென்ற டிரைவர் அருள் சுந்தர் மேட்டுக்கடை பகுதியில் வைத்து காவலரை தாக்கி தள்ளி விட்டு டெம்போவுடன் தப்பி சென்றுள்ளார்.

சாலையில் தர தரவென டெம்போவுடன் இழுத்து செல்லப்பட்ட காவலர் பெல்வின் ஜோஸ் கால் முட்டு கை மற்றும் தலையில் படுகாயம் ஏற்பட்ட நிலையில் அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பத்மநாபபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் முதலுதவி சிகிட்சைக்கு பின் சிகிட்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து காவலர் பெல்வின் ஜோஸ் கொடுத்த புகாரின் அடிப்படையில் டிரைவர் அருள் சுந்தர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5-பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த தக்கலை போலீசார் டெம்போவுடன் தலைமறைவான அவரை நாகர்கோவில் பகுதியில் வைத்து கைது செய்து சிறையிலடைத்தனர்.