குற்றம்

"கொலையை விட பாலியல் வன்கொடுமை கொடூரமானது" - மும்பை போக்சோ நீதிமன்றம்

Veeramani

கொலையை விட கொடூரமானது பாலியல் வன்கொடுமை என மும்பை போக்சோ நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு மனவளர்ச்சி குன்றிய 15 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 2 பேரை குற்றவாளிகள் என மும்பை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் ஒருவர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், மற்றொருவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.



அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், பாலியல் வன்கொடுமை என்பது கொலையை விட கொடூரமானது என்றும், அக்கொடூரத்திற்கு ஆளாகும் பெண்களின் ஆன்மாவையே அழித்துவிடக் கூடியது எனவும் குறிப்பிட்டனர்.