குற்றம்

அரசுப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமையாசிரியர் போக்சோவில் கைது

அரசுப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமையாசிரியர் போக்சோவில் கைது

kaleelrahman

நாகர்கோவில் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தலைமையாசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமையாசிரியராக பறக்கையைச் சேர்ந்த லட்சுமண வேல் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து அந்த பள்ளியில் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். இதில், தலைமையாசிரியர் தங்களிடம் அத்துமீறி தகாத முறையில் நடந்து கொண்டதாக மாணவிகள் தெரிவித்தனர் இதையடுத்து அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் தலைமையாசிரியர் லட்சுமண வேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.