குற்றம்

பாலியல் துன்புறுத்தல் வழக்குகளை கம்பளத்தின் கீழ் சுத்தப்படுத்த முடியாது : உச்சநீதிமன்றம்

பாலியல் துன்புறுத்தல் வழக்குகளை கம்பளத்தின் கீழ் சுத்தப்படுத்த முடியாது : உச்சநீதிமன்றம்

Veeramani

பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், துறை விசாரணைக்கு உத்தரவிட உயர்நீதிமன்றம் தகுதி வாய்ந்தது, அதனால் முன்னாள் நீதித்துறை அதிகாரி அதை எதிர்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தது.

பாலியல் துன்புறுத்தல் வழக்குகளை "கம்பளத்தின் கீழ் சுத்தப்படுத்த" அனுமதிக்க முடியாது என்று காட்டமாக உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. மத்திய பிரதேசத்தின் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி மீது ஜூனியர் பெண் நீதித்துறை அதிகாரி தெரிவித்த பாலியல் துன்புறுத்தல் புகார் தொடர்பாக, உயர்நீதிமன்றம் உத்தவிட்ட "உள்ளக துறைசார் விசாரணையை", அவர் எதிர்கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது.

"பாலியல் துன்புறுத்தல் வழக்குகளை இதுபோன்ற கம்பளத்தின் கீழ் கொண்டு செல்ல நாங்கள் அனுமதிக்க முடியாது" என்று தலைமை நீதிபதி எஸ் பாப்டே தலைமையிலான பெஞ்ச் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் எஸ் போபண்ணா மற்றும் வி ராமசுப்பிரமணியன் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச், முன்னாள் நீதிபதிக்கு ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்.பாலசுப்பிரமணியத்தின் கடுமையான சமர்ப்பிப்புகளை நிராகரித்தது, பெண் நீதித்துறை அதிகாரி தனது முந்தைய புகாரை வாபஸ் பெற்றதாகவும், அவர் "சமரசம்" வேண்டும் என்று திட்டவட்டமாக கூறியதாகவும் அவர் கூறினார்.

ஆனால், வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்தப்பட்ட மத்தியப்பிரதேச உயர்நீதிமன்ற விசாரணையில் தலையிடப் போவதில்லை என்று உச்சநீதிமன்ற அமர்வு தெளிவுபடுத்தியதுடன், இன்றைய தேதியின்படி முன்னாள் நீதிபதி "குற்றவாளி" என்று தீர்ப்பளிக்கப்பட்டவர், மேலும் அவர் விசாரணையை எதிர்கொண்டால் ஒருவேளை குற்றமற்றவர் என நிரூபிக்கலாம் எனவும் தெரிவித்தனர்

"நீங்கள் எந்த நேரத்திலும் விழக்கூடிய மிக மெல்லிய பனிக்கட்டி மீது நீங்கள் நடந்து கொண்டிருக்கிறீர்கள். அவர்கள் நடத்தும் விசாரணையில் உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கக்கூடும், நீங்கள் விடுவிக்கப்படலாம்" எனக் கூறிய உச்சநீதிமன்ற பெஞ்ச் அவரிடம் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டது. இதன்பின்னர் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டை முன்னாள் நீதிபதிக்கான வழக்கறிஞர் வாபஸ் பெற்றார்.

"சில சங்கடங்கள்" காரணமாக புகார்தாரர் புகாரை வாபஸ் பெற்றிருக்கலாம் , ஆனால் அது துறை ரீதியான நடவடிக்கைகளைத் தொடங்குவதைத் தடுக்காது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.