குற்றம்

பாலியல் வன்கொடுமை: அதிமுக நிர்வாகி கைது

பாலியல் வன்கொடுமை: அதிமுக நிர்வாகி கைது

webteam

கன்னியாகுமரியில் வீடு புகுந்து இளம்பெண்ணை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்த முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  

கன்னியாகுமரி மாவட்டம் தேரிவிளை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் அப்பகுதியின் அதிமுக நிர்வாகியாக இருந்து வருகிறார். இவர் நேற்று தனது அண்டை வீட்டில் வசித்து வரும் இவாஞ்சலின் என்ற பெண்ணை வீடு புகுந்து தாக்கியதோடு அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இவாஞ்சலின் கணவர் ஜான் பெர்லார்மின் வேலைக்கு சென்ற பின்னர் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. 
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் தென்தாமரைக்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து அந்த நபரின் மீது பாலியல் வன்கொடுமை, பெண்ணிடம் அத்துமீறல் என வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் செல்வராஜை இன்று கைது செய்தனர். மேலும் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியாக உள்ள பெண்ணிடம் வீடு புகுந்து முதியவர் அத்து மீறிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.