செந்தில் பாலாஜி கைதும் பின்னணியும்
செந்தில் பாலாஜியின் சென்னை இல்லம் மற்றும் அவரது சட்டமன்ற அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். இந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நள்ளிரவு 3 மணியளவில் தெரிவித்தனர். அதேநேரத்தில், அவருக்கு நேற்று நள்ளிரவு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், அமலாக்கத்துறை விசாரணையில் இருந்த செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர், அமலாக்கத் துறை கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்த செந்தில்பாலாஜி மனுவை நிராகரித்து, நீதிமன்ற காவலில் அடைக்க சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். செந்தில்பாலாஜி வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜியின் கைது தொடர்பாக புதிய தலைமுறையில் நேரலையில் முன் வைக்கப்பட்ட கருத்துக்களை இனி காணலாம்..
வ. புகழேந்தி (வழக்கறிஞர்)
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தான் அமலாக்கபிரிவு செந்தில்பாலாஜியை கைது செய்து இருக்கிறார்கள். (கைது குறித்து அமலாக்கப்பிரிவு தகுந்த காரணத்தை தெரிவிக்கவில்லை என்ற கேள்விக்கு பதில்) உயர்நீதிமன்றத்தில் பணம் பெற்றதாகவும், மீண்டும் பணத்தை கொடுத்துவிட்டதாகவும் ஒப்புதல் வாக்குமூலத்தை அளிக்கிறார். இதுதான் ஆதாரம். ஆனால், நீதிபதி வழக்கை முடித்து வைக்கிறார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லும் சமயம் உச்சநீதிமன்றமானது அமலாக்கதுறையை விசாரிக்க சொல்கிறது.
அமலாக்கப்பிரிவிற்கு விசாரனை அதிகாரமும் கைது செய்வதற்கு அதிகாரமும் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் காலத்தில் தான் கொடுக்கப்பட்டது.
வலது சாரிகட்சி ஸ்ரீராம்;
இது எல்லாம் உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கை தான். அது போல் வருமான வரித்துறை ஆட்கள் வந்த சமயம் செந்தில் பாலாஜியின் ஆட்கள் எப்படி நடந்துக்கொண்டார்கள் என்று மக்கள் அனைவருக்கும் தெரியும்.
இதில் அமலாக்கத்துறை தவறு செய்திருந்தால் உச்சநீதி மன்றம் அமலாக்கத்துறையை கேள்வி கேட்பார்கள். இதைப்பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள வீடியோவை காணலாம்