செம்பியம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்த முதல் நிலை காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரிந்து வந்தவர் ஜோசப் (39). இவர் செம்பியம் காவலர் குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து வந்த செம்பியம் போலீசார் இறந்தவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.