குற்றம்

கேரளாவுக்கு கடத்த முயன்ற போதைப்பொருள் பறிமுதல்: மதிப்பு எவ்வளவு?

கேரளாவுக்கு கடத்த முயன்ற போதைப்பொருள் பறிமுதல்: மதிப்பு எவ்வளவு?

kaleelrahman

கூடலூர் வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் மதிப்புள்ள 100 கிராம் MDMA போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கேரள மாநிலத்தில் MDMA போதைப்பொருள் மிக பிரபலமான ஒன்றாக இருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் இருந்து இந்த வகை போதை பொருள் கூடலூர் வழியாக கடத்தப்பட்டு கேரளாவில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. கள்ள சந்தையில் MDMA போதைப்பொருள் கிராம் ஒன்றுக்கு 10 ஆயிரத்திற்கு மேல் விலை போவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் தமிழக - கர்நாடக எல்லையிலுள்ள கக்கநல்லா சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரள பதிவு எண் கொண்ட கார் ஒன்றை நிறுத்தி அதன் ஓட்டுநரிடம் ஆவணங்களை கேட்டுள்ளனர். திடீரென காரை ஓட்டி வந்த நபர் அங்கிருந்து தப்பி வனப்பகுதிக்குள் சென்றார்.

இதையடுத்து காரை சோதனை செய்தபோது காருக்குள் 100 கிராம் MDMA போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போதைப்பொருளையும் காரையும் பறிமுதல் செய்த கூடலூர் போலீசார்,. இது தொடர்பாக கேரளா போலீசாருடன் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.