குற்றம்

பள்ளி மாணவர் பெட்ரோல் ஊற்றி எரிப்பு

பள்ளி மாணவர் பெட்ரோல் ஊற்றி எரிப்பு

Rasus

திருப்பத்தூர் அருகே 9 ஆம் வகுப்பு மாணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த ஜோன்றம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். அதேபகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவன் கோவிந்தன் சிறப்பு வகுப்பிற்காக சென்றபோது, அடையாளம் தெரியாத நபர்கள் மாணவனை கடத்திச் சென்றுள்ளனர். மேலும் மாணவனை யாரும் இல்லாத இடத்திற்கு கொண்டு சென்ற அந்த நபர்கள், மாணவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளனர். பின்னர் அவர்கள் எஸ்கேப் ஆகிவிட, மாணவனின் அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கம் இருந்த நபர்கள் மாணவனை மீட்டுள்ளனர்.

படுகாயமடைந்த மாணவர் வேலூர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவிந்தனின் அம்மா மற்றும் அப்பா இடையே மனக்கசப்பு இருந்துள்ளது. இருவரும் பிரிந்துதான் வாழ்ந்து வருகின்றனர். கோவிந்தன் அம்மா வழி பாட்டி வீட்டில் தங்கி இருந்து படித்துவந்த நிலையில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. மாணவன் கடத்தி எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.