குற்றம்

கொரோனா நெகட்டிவ்: மீண்டும் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட சாத்தான்குளம் முருகன்

கொரோனா நெகட்டிவ்: மீண்டும் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட சாத்தான்குளம் முருகன்

webteam

சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் இருந்த முருகன் கொரோனா நோய் தொற்றிலிருந்து குணமடைந்து மீண்டும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மகன் அடித்து சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. பரிசோதனையில் முருகனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து முருகன் கடந்த மாதம் 28ம் தேதி கொரோனா நோய்தொற்று காரணமாக சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர் சிகிச்சையின் பலனாக தற்போது பூரண குணமடைந்துள்ளார். மீண்டும் அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா நெகட்டிவ் என்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இன்று முருகன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டுள்ளார்.