செய்தியாளர்: ஆர்.ரவி
சேலம் அருகே 14 வயது சிறுமி, அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் குமரேசன் (50) என்பவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார்.
இதுகுறித்து மாணவி, தனது வகுப்பு ஆசிரியையிடம் கூறியுள்ளார். இதையடுத்து அந்த ஆசிரியை மாணவியின் தந்தையிடம் நடந்ததை தெரிவித்துள்ளார். அதன்பின் மாணவியின் தந்தை குழந்தைகள் உதவி மையத்துக்கு புகார் கூறியுள்ளார். அதனடிப்படையில், ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், லாரி டிரைவர் குமரேசனுக்கும் சிறுமியின் தாய்க்கும் பழக்கம் இருந்துள்ள நிலையில், கடந்த பிப்ரவரி 17ம் தேதி, வீட்டில் இருந்த சிறுமியை கட்டாயப்படுத்தி குமரேசன் பாலியல் தொல்லை கொடுத்ததோடு வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இதற்கு சிறுமியின் தாய் உடந்தையாக இருந்துள்ளதும் தெரியவந்தது. லாரி டிரைவர் குமரேசன், சிறுமியின் தாய் ஆகியோர் மீது ‘போக்சோ வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.